கன்னியாகுமரி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ. ஆயிரக்கணக்கான அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்.

289

கன்னியாகுமரி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நெடுமலை பகுதியில் நள்ளிரவில் திடிரென காட்டுத் தீ ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் நெடுமலையின் பெரும்பாலன பகுதிகள் தீயில் கருகி நாசமாகின. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர், காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுத் தீயினால் நெடுமலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள் தீயில் கருகின. மான், முயல் உள்ளிட்ட வன விலங்குகள் தீயில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காட்டுத் தீயை முழுமையாக அனைத்த பின்னரே, பாதிப்புகள் குறித்து தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.