கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.

219

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் மிக பழமையான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில், கை தொழில்கள் கற்று தர வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்த உயர்ந்த திட்டத்தின்படி, இப்பள்ளியில் பயில்கிற மாணவர்களால் மட்டுமே செய்யப்பட்ட பொம்மைகள், தையல் துணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் அனைத்து விதமான கைவினை பொருட்களும் இடம் பெற்ற, கைவினைப் பொருட்களின் கண்காட்சி கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மேலும் பள்ளி மாணவர்கள் கை தொழில் கற்று கொள்ள வேண்டும் என்ற, உயர்ந்த திட்டத்தை தந்த தமிழக முதல்வருக்கு, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்தனர்.இந்த கைவினை பொருட்களின் கண்காட்சியை காண அனைத்து பள்ளிகளைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.