கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலைமுதலே குவிந்தவண்ணம் உள்ளனர்.

219

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால், கோடை விடுமுறை முடிவடைந்ததை அடுத்து குமரி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிக் காட்சியளித்தன. இந்த நிலையில், இன்று வார விடுமுறை நாள் என்பதால், குமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்த மண்டபம், காந்தி மண்டபம், திருவள்ளுவர் பாறை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றன.