கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 15 பேர் கரை திரும்பாததால், அவர்களைதேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

192

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 15 பேர் கரை திரும்பாததால், அவர்களைதேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
சின்ன முட்டம் பகுதியில் கடந்த ஆறாம் தேதி மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நேற்றிரவு கரை திரும்பி விட்டனர். ஆனால், 15 மீனவர்கள் மட்டும் இன்று காலை வரை வரவில்லை. இதுபற்றி கடலோர காவல் குழுமம், குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் உறவினர்களும், மீனவர்களும் புகார் அளித்துள்ளனர். படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டு அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாயமான 15 மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.