தென்மேற்கு பருவக் காற்று வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

296

தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை, குமாரபுரம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகளில் தென்மேற்கு பருவகாற்று காலத்தில் அதிக அளவு மின்சாரம் செய்யப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவ காற்று 15 மீட்டர் அளவிற்கு வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மின்உற்பத்தி அதிகரித்து வந்தது. இந்த நிலையில், நேற்று நிலவரப்படி அதிகபட்சமாக 3 ஆயிரத்து 655 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. காற்று தொடர்ந்து அதிகமாக வீசினால் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என காற்றாலை பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.