சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா பறிமுதல்..!

540

சேலம் அருகே ஆந்திராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 70 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவிலிருந்து தேனிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சம்பத், போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவிலிருந்து தேனி சென்றுகொண்டிருந்த சபரி எக்ஸ்பிரஸ் ரயிலை சேலம் அருகே நிறுத்தி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 பைகளில் 70 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பல் ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தது. அவர்களை விரட்டி சென்ற போலீசார் கும்பலை சேர்ந்த முத்து என்பவரை மட்டும் கைது செய்தனர். தப்பியோடிய 5 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.