கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் தவிப்பு..!

100

கன்னியாகுமரியில், கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக, பத்து அடிக்கு மேலான கடல் அலைகளுடன் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், புதுகிராமம்,மணக்குடி,கோவளம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதிக உயரத்தில் எழும்பும் அலைகள் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.