நிமிர் வணக்கம் என்ற பெயரில் கருணாநிதிக்கு புகழஞ்சலி..!

135

பாசிச பாஜக ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதற்கு பினாமியாக செயல்படும் அதிமுக ஆட்சியை அகற்றுவதே, மறைந்த கருணாநிதிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பில் உள்ள தனியார் பள்ளியில், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிமிர் வணக்கம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய ஈவிகேஎஸ்.இளங்கோவன், தற்போது மதத்தின் பெயரால் இயங்கிக் கொண்டிருக்கும் பாஜக அரசையும், தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் அம்மா, அம்மா என்று கூறிக்கொண்டிருக்கும் அதிமுக அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும், முடிந்தால் கம்பிக்குப் பின்னால் அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய திமுக எம்பி கனிமொழி, நாட்டை சூறையாடி வரும் பாசிச பாஜக ஆட்சி மற்றும் அதன் பினாமியாக செயல்படும் அதிமுக ஆட்சியை அகற்றுவதே, கருணாநிதிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று கூறினார்.