கனிமொழி பெயரில் அவதூறு கருத்து பதிவு : தி.மு.க சார்பில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்

186

தி.மு.க எம்.பி கனிமொழி பெயரில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் அவருடைய மகளும், தி.மு.க எம்.பியுமான கனிமொழி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால் அவரது பெயரை பயன்படுத்தி விஷமிகள் சிலர் அவதூறு கருத்து பரப்பி வருகின்றனர். அதிலும் கருணாநிதியை பார்க்க வருபவர்களை குறித்தும், இந்துக்களின் மனம் புண்படும் வகையிலும் நச்சு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனால் கனிமொழி சார்பில், வழக்கறிஞர் செல்வநாயகம் என்பவர், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 3 போஸ்ட்டுகளுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.