பா.ஜ.க. கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்றது – தி.மு.க. எம்.பி. கனிமொழி

67

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள பத்து சதவித இட ஒதுக்கீடு, உண்மையான வறுமையில் உள்ள உயர்சாதியினருக்கு பயன்தராது என தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் உதவ அரசு முன்வந்தால் இலவச கல்வி வழங்கலாம் என யோசனை தெரிவித்தார்.