அதிமுகவினர் மற்றவர்களை குறைகூற என்ன தகுதி உள்ளது : திமுக எம்பி கனிமொழி கேள்வி ..!

273

கட்சியை காப்பாற்ற முடியாத அதிமுகவினர் மற்றவர்களை குறைகூற என்ன தகுதி இருக்கிறது என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திந்தபோது அவர் இவ்வாறு கூறினார். சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என குடியரசு தலைவர் வரை சென்று முறையிட்டதாகக் கூறிய கனிமொழி, எந்தவித பதிலும் கிடைக்காததால் திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவித்தார்.