இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், இதுதொடர்பான சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

215

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், இதுதொடர்பான சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்கவையில், டெல்லியில் சமீபத்தில் நடந்த பலாத்காரம் தொடர்பாக எம்.பி.க்கள் பலர் குரல் எழுப்பினர். இதுகுறித்து பேசிய கனிமொழி, பெண் குழந்தைகள் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலை தரும் விஷயமாகும் என்று அவர் தெரிவித்தார். அத்துடன் டெல்லியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது தமக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார். இதுபோன்ற வன்செயல்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிகாட்டினார். இதுகுறித்து அவையில் விவாதித்து நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள், குழந்தைகள் காக்கும் விதமாக கடும் சட்டங்களை இயற்றப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.