நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது : கனிமொழி

253

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது என திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு மருத்துவ மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துகிறது என்ற தவறான வாதம் வைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். தமிழக மருத்துவர்கள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் திறமையாக பணிபுரிந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு தரம் உயர்த்துவதற்காக அல்ல என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார். மருத்துவ மேற்படிப்பில் நீர் தேர்வு வரக்கூடாது என்பது நியாயமானது என தெரிவித்த கனிமொழி, இதனை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.