கன்னியாகுமரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கொடிய வகை விஷ பாம்பை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

349

கன்னியாகுமரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கொடிய வகை விஷ பாம்பை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி அருகே மந்தாரம்புதூர் குடியிருப்பு பகுதிக்குள் கொடிய வகை விஷ பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி விஷ பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது. இந்த வகை பாம்புகள் பார்க்க சாதுவாக இருந்தாலும் கொடிய விஷம் கொண்டவை எனவும், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் மட்டுமே வசிக்கக் கூடியவை எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.