நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயார் – முதல்வர் பழனிசாமி

156

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராக இருப்பதாகவும், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் 17 சிங்கங்கள் உள்ளன. இங்கு 6 மாதத்திற்கு முன்பு பெண் சிங்கக்குட்டி பிறந்தது. இந்த சிங்கக்குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயா என்று பெயர் சூட்டினார். மேலும் பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து காண்டா மிருகம் ஒன்று பொதுமக்கள் பார்வைக்காக இங்கு கொண்டுவரப்பட இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின், விஜயபாஸ்கர் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராக உள்ளதாக கூறினார்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பூங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புலிகள் இருப்பிடம் மற்றும் 27 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.