பழவேலி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்..!

138

காஞ்சிபுரத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட இளம் பெண், கேரளாவில் மாயமான கல்லூரி மாணவி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜேசா மார்ச் 22-ம் தேதி மாயமானார். இந்தநிலையில், செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் இளம் பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், கேரள மாநிலத்தில் மாயமான கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, கேரள போலீசாரும், மாணவியின் உறவினர்களும் காஞ்சிபுரம் வந்தனர். எரித்துக் கொல்லப்பட்டது ஜேசா கிடையாது என்று தெரிவித்த அவர்கள், டிஎன்ஏ பரிசோதனை நடத்த ஒப்புக் கொண்டனர். இதனால், இந்த வழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.