காஞ்சிபுரத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும் திருமணம் கைகூடவும் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி சண்டி யாகம் நடைபெற்றது.

218

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும் திருமணம் கைகூடவும் ஸ்ரீ சாமுண்டேஸ்வரி சண்டி யாகம் நடைபெற்றது.
கடந்த 18 ந் தேதி முதல் 22 தேதிவரை நடைபெற்ற இந்த யாகத்தில் சண்டி பாராயணம், குங்கும அர்ச்சனை, லலிதா சகஸ்ரநாமம், புஷ்பாஞ்சலி, சுமங்கலி பூஜை கன்னியா பூஜைகள் நடைபெற்றன. கடைசி நாளில் மஹா பூர்ணாவதியுடன் பால் தென் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமுண்டேஸ்வரி சண்டி யாகம் தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.