சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருப் படங்களை ஊராட்சி- நகராட்சி மன்றங்களில் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

239

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி சர்மாவின் 91-வது நினைவு நாள் காந்தி பேரவை சார்பில் காஞ்சிபுரத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதில் சுதந்திர போராட்டத் தியாகியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரிஅனந்தன் கலந்துகொண்டு அவரது திருவுருவப் படத்தை திறந்துவைத்தார்.
மூட நம்பிக்கைகளை எதிர்த்து வாழ்ந்த தியாகி சர்மாவின் திருவுருவப் படம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு காஞ்சிபுரம் பெருநகர மன்ற அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.