வார்த் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

270

வார்த் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள வார்த் புயல் இன்று கரையை கடப்பதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரங்களுக்கு பெருமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதல் இந்த மூன்று மாவட்டங்களில்
சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. சென்னையில் பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலத்த காற்று வீசிவருவதால் மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.