காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 கி.மீ. தூரம் நிலம் அளவீடு பணி தொடக்கம்..!

379

8 வழிச்சாலைக்கான நிலம் அளவீடு செய்யும் பணியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்யும் பணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கியது. தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜி தலைமையில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை தொடங்கினர். 8 வழிச்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் அளவீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.