வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம்

178

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நேற்றிரவு ஒன்றேமுக்கால் மணி வரை பக்தர்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இருபதாம் நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இரவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்ததால் நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம் தொடர்ந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடைபிடித்துக்கொண்டு வரிசையில் நின்று அத்திவரதரை வழிபட்டனர்.

கோவிலுக்கு வந்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். கோவிலில் பக்தர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் இருந்து காவலர்களை வரவழைக்க உள்ளதாகவும் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தெரிவித்தார்.