அத்தி வரதர் தரிசனம் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

176

அத்தி வரதர் தரிசனம் மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம். இந்த முறை கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் சயன கோலத்தில் அத்தி வரதர், 30 ஆம் தேதி வரை காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் ஒன்று முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 43 நாட்கள் நிறைவடைந்த நிலையில் 89 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 44 ஆவது நாளான இன்று, பச்சை மற்றும் இளம் ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அத்தி வரதர் காட்சி அளித்து வருகிறார். தோல் மற்றும் கைகளில் 8 கிளிகள் வைத்தபடியும் ராஜா மகுடம் அணிந்தபடியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. பல மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காததால், உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தெரிவித்துள்ளது.