காஞ்சிபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்!

311

காஞ்சிபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞருக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய தூதரக அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர், பெர்டினிகா என்ற 25 வயது இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை சுற்றி பார்க்க காஞ்சிபுரம் வந்தார். இந்நிலையில் அவரது ஏ.டி.எம் எதிர்பாராவிதமாக முடக்கப்பட்டதால் பணமின்றி தவித்தார். வேறு வழியின்றி காஞ்சிபும் முருகன் கோவில் வாசலில் அவர் பிச்சையெடுத்தார். வெளிநாட்டு இளைஞரின் இந்தச் செயல் சமூக வலைத் தளங்களில் வைரலானது. இதையடுத்து, காஞ்சிபுரம் காவல்துறையினர் அவருக்கு பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வர வைத்தனர்.
ஆனால் பெர்டினிகா சென்னை மாம்பலம் பகுதியில் தொடர்ந்து பிச்சையெடுத்து வருகிறார். விசா காலம் முடிய 20 நாட்கள் உள்ள நிலையில், பிச்சை எடுப்பது பிடித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள ரஷ்ய தூதரக அதிகாரி, பெர்டினிகாவிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், அவருக்கு தங்க இடம், உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.