காரில் கடத்தி வரப்பட்ட 58 கிலோ கஞ்சா பறிமுதல்..!

81

லக்னோ அருகே, காரில் கடத்தி வரப்பட்ட 58 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தடைச் செய்யப்பட்ட 58 கிலோ எடையுடைய கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.