கணவர் இறந்த செய்தியை நேரலையில் வாசித்த தொகுப்பாளர் !

444

தன்னுடைய கணவர் இறந்த செய்தியை பெண் செய்தி தொகுப்பாளர் ஒருவர் நேரலையில் வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை ஐபிசி 24 தொலைக்காட்சி சேனல் நேரலையில் கொடுத்தது. அப்போது, தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக செய்தியாளர் கொடுத்த தகவலை செய்தி தொகுப்பாளர் சுப்ரீட் கவுர் என்பவர் நேரலையில் வாசித்தார். விபத்தில் தன் கணவர் இறந்த செய்தியை பெண் தொகுப்பாளர் நேரலையில் வாசித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.