காலா படத்திற்கு எதிராக கன்னடர்கள் ஆர்ப்பாட்டம்..!

308

காலா படம் மட்டுமின்றி, ரஜினிகாந்தின் எந்த படத்தையும் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததையடுத்து, ரஜினிகாந்துக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, மாநில நலன் கருதி கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிடப் படாது என முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலா படம் மட்டுமின்றி, ரஜினிகாந்தின் எந்த படத்தையும் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.