வியட்நாமில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை | பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

166

வியட்நாமில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஆசிய நாடுகளில் கடும் மழை பெய்து வருகிறது. வியட்நாமில் சூறைக் காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள நகரங்களின் சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி சென்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.