பாரம்பரிய கம்பாலா எருது போட்டிக்கு தடை நீக்கம் | சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் ஒப்புதல்

302

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா எருது போட்டியை நடத்த குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வரலாறு காணாத எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோன்று, கர்நாடக மக்களும் கம்பாலா எருது போட்டியை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். சேறு, நீரும் கலந்த வயல்வெளியில் எருதுகளை பூட்டி வேகமாக ஓட்டிச் செல்வதே கம்பாலா விளையாட்டு ஆகும். நூற்றாண்டுகள் பழமையான இந்த விளையாட்டை மீண்டும் நடத்த கர்நாடக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து, கர்நாடகாவில் இந்த ஆண்டு கம்பாலா எருது போட்டிகள் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.