காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுத்திருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர்….

222

காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுத்திருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காமராஜரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் உருவப் படத்திற்கு திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக விளங்கியவர், கிங்மேக்கராக திகழ்ந்தவர் காமராஜர் என்று புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் இந்த நாளில் இருந்து எடுப்பதாக கூறிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பேரியக்கமாக மாற்றப் போவதாக தெரிவித்தார்.