சம்பா சாகுபடிக்கு தேவையான பொருட்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது – அமைச்சர் காமராஜ்

130

கல்லணை திறக்கப்படும் நிலையில் சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல், இடுபொருட்கள் போதிய அளவு கையிருப்பில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விழாவில் அமைச்சர் காமராஜ் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்லணை திறக்கப்பட உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள தேவையான விதை நெல், உரம், பூச்சி மருந்து ஆகியவை தேவையான அளவு கையிருப்பு இருப்பதாக கூறினார். மேலும் விவசாய கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.