பொங்கலுக்கு பின்னரும் பரிசுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் – அமைச்சர் காமராஜ்

113

பரிசு தொகை வாங்க தவறியவர்கள் பொங்கல் பண்டிகைக்கு பின்னரும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஸ்டாலின் குறுக்கு வழியில் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் கொடநாடு பிரச்சனை பற்றி பேசி வருவதாக தெரிவித்தார். அவரது கனவு குறித்து பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் பொங்கல் பரிசு வாங்க தவறியவர்கள், பொங்கல் பண்டிகை முடிந்த பின், உரிய ஆவணங்களை காண்பிடித்து ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.