கமல்ஹாசன் ஆடம்பர முட்டாள் : சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் கருத்து.

348

நடிகர் கமல்ஹாசன் ஆடம்பர முட்டாள் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசுக்கு எதிராக தொலைக்காட்சி, டூவிட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதையடுத்து, அவருக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.கவினர் விமர்சனத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கம்யூனிஸ்ட் கொள்கைகளில் தமக்கு மிகுந்த உடன்பாடு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் தொடர்பாக பேசினார்.
இந்நிலையில், கமல்ஹாசன் ஒரு ஆடம்பர முட்டாள் என பா.ஜ.க.மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடம்பர பகட்டு முட்டாளான கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.