கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்தது போன்ற சம்பவம் மீண்டும் நிகழக் கூடாது நடிகர் கமலஹாசன் இரங்கல் !

337

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்தது போன்ற சம்பவம் மீண்டும் நிகழக் கூடாது என்று நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழப்புக்கு நடிகர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், உத்தரப் பிரதேசத்தில் 63 குழந்தைகள் உயிரிழந்தது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்தியா முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர கமலஹாசன் தனது டுவிட்டரில் வலியுறுத்தியிருக்கிறார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஒத்துழைக்குமாம் என்று பதிவிட்டுள்ள அவர், குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம் என்றும், மாணவர்களின் எதிர்காலம் பற்றியது உடனே பேசுங்கள் என்றும் நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.