கமல்ஹாசனை பற்றி பேச ஹெச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது – நடிகர் மயில்சாமி…!

355

கமல்ஹாசனை பற்றி பேச பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என நடிகர் மயில்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி அந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.இவர்களின் போராட்டம் நேற்று 100-ஆவது நாளை எட்டியது . போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது போராட்டம் நடத்துபவர்களை தேச துரோகிகள் என்று ஹெச். ராஜா பேசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். . ஹெச்.ராஜா தேர்தலில் நிற்கும் தொகுதியில் கமலை நிறுத்தினால்
அவரால் வெற்றி பெற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய மயில்சாமி, கமலை பற்றி பேச ஹெச்.ராஜாவுக்கு தகுதி இல்லை என்றும் சாடி உள்ளார்