தேவை ஏற்பட்டால் மன்னிப்பு கேட்க தயார் என கமல் டுவிட்டரில் பதிவு !

0
181

மலையாள நடிகை பலாத்கார வழக்கில் பெயரை குறிப்பிட்ட விவகாரத்தில், தேவை ஏற்பட்டால் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த புதன்கிழமை இரவு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது. நடிகர் திலீப் விவகாரத்தில் மலையாள நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், நடிகையின் பெயரை பகிரங்கமாக கூறியதோடு, அவரது பெயரை ஏன் சொல்லக் கூடாது என்றும் வாதாடினார். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நடிகையின் பெயரைக் கூறியது ஏன் என்று விளக்கம் கேட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில், தவறு செய்பவர்களை விட்டுவிட்டு போராடுபவர்களையே தண்டிப்பதாக கூறியுள்ளார். இது குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிப்பது போல் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். கடவுளை தவிர சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்று பதிவிட்டுள்ள கமல்ஹாசன், காரணமின்றி யாருக்காவும், எதற்காகவும் நான் வளைந்து கொடுப்பவன் அல்ல என்றும், பெண்களை நேசிப்பவன், அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவன் நான் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY