காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது – நடிகர் கமல்ஹாசன்.

626

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நதிநீர் தொடர்பான தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார். காவிரி விவகாரத்தை இரு மாநில அரசுகளும் அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட கமல், இரு மாநில அரசுகளும் கலந்து பேச வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.