தனது ஆயுளுக்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன் என நடிகர் கமல்ஹாசன் சூளுரைத்துள்ளார்..!

245

தனது ஆயுளுக்குள் இந்தியாவை பெருமையடைய செய்வேன் என நடிகர் கமல்ஹாசன் சூளுரைத்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளையை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கு பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்று தெரிவித்தார். அதற்கான பயணம் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், கிராமங்களில் டிஜிட்டல் பேங்கிங் கொண்டு வரும் முதல் மாநிலம் தமிழகமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.