விஸ்வரூபம்-2 திரைப்படம் ஆகஸ்டு 10ம் தேதி திரைக்கு வருவதாக கமல்ஹாசன் அறிவிப்பு..!

275

கமல்ஹாசன் நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. இது அவருக்கு மிகபெரிய வெற்றிப் படமாக அமைந்ததை தொடர்ந்து விரைவில் 2ஆம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் 2014ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2, மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஆனால் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் 2015ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2ஆம் பாகத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ் பதிப்பை ஸ்ருதிஹாசனும், இந்தி, தெலுங்கு பதிப்புகளை அமீர்கான், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வெளியிட்டனர்.