நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளவேண்டும் : அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

0
331

நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளவேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
kamal
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற பெயரில் சமூதாயத்தில் பின்தங்கிய மக்கள் குறித்து கமலஹாசன் தரம் தாழ்ந்த வகையில் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். கமலஹாசனின் முழுமுயற்சியால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவர் கமல் என்று புகார் கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக கமலஹாசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY