விவேகம் படம் வெளியான நிலையில், அஜித்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

618

விவேகம் படம் வெளியான நிலையில், அஜித்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விவேகம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் அஜித்குமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அஜித் மற்றும் விவேகம் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகள் அக்‌ஷரா ஹாசனுடன் விவேகம் படம் பார்த்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இதுதொடர்பாக நல்ல செய்திகளை கேள்வி படுவதாக பதிவிட்டுள்ளார்.