மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

455

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததாக மாணவி வளர்மதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவரது தந்தை மாதையன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், மாணவி வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பவுர்ணமி போல் வளர்மதி வளர வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.