தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது – கமல்ஹாசன்

595

தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், கிராமம், கிராமமாக சென்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். மக்களை புரிந்து கொள்ள சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட கமல், சிறிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பெரிய மனம் இருக்கிறது என்றார். இளைஞர்கள் அன்பையும், ஆதரவையும் கொட்டி தருகிறார்கள் என்றும், இளைஞர்களது எண்ணத்தை நிகழ்த்தி காட்டவே தான் இங்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது என கமல்ஹாசன் கூறினார்.