ஆட்சியாளர்களை கேள்வி கேட்கவே அரசியலுக்கு வந்தேன் – கமல்ஹாசன் விளக்கம்

1331

ஆட்சியாளர்களை கேள்வி கேட்கவே அரசியலுக்கு வந்ததாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், யூடியூப்-பின் மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீர் நிலைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும், நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை என்றும் வலியுறுத்தினார்.
அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒரு நிமிடத்தில் நேரத்தில் எடுத்த முடியவல்ல எனக் கூறிய அவர், நம்முடைய அஜாக்கிரதையால் அரசியலை மோசமான நிலைக்கு தள்ளி விட்டதாக வருத்தம் தெரிவித்தார். ஜனநாயகம் என்ற மிகப் பெரிய ஆயுதம் கொண்டு, வன்முறையின்றி போராட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்திய கமல், இளைஞர்கள் நினைத்தால் மிக பெரிய அழுத்தத்தை கொடுக்க முடியும் என்றார். பாலியல் குற்றங்களை தடுக்க அரசாட்சி செய்ய வேண்டியதை விட மனசாட்சி செய்ய வேண்டியதே முக்கியம் என கமல் குறிப்பிட்டார்.