காந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்

186

காந்தியின் தீவிர ரசிகன் நான். அதனால்தான் ஹேராம் படத்தில் காந்தியின் செருப்பை எடுத்து வந்ததாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை, வேளச்சேரியில் பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காந்தி ரயிலில் சென்றபோது செருப்பு தவறி விழுந்து விட்டது. அப்போது காந்தி மீதமிருந்த செருப்பையும் தூக்கி வீசினார். இதுகுறித்து கேட்டபோது ஒரு செருப்பு இருந்தால் யாருக்கும் பயன்படாது, இரு செருப்பு இருந்தால் யாருக்காவது பயன்படும் என்று கூறினார். காந்தி வீசிய செருப்பில் ஒன்று வந்து விட்டது. விரைவில் மற்றொன்றும் வரும் என எதிர்பார்ப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரியப்பனுக்கு ஒத்த செருப்பு படக்குழுவினர் சார்பில் வழங்கப்பட்ட தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான 2 ஷூக்கள் போல் வடிவமைக்கப்பட்ட பந்தினை கமல்ஹாசன் வழங்கினார்.