பொதுமக்கள் அனைவரும் மழை நீரை சேமிக்க வேண்டும் – கமல்ஹாசன்

82

பொதுமக்கள் அனைவரும் மழை நீரை சேமிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

சென்னை தி.நகரில் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த சங்கத்தில் தொடர்ந்து 2 முறை தலைவராக இருந்து வரும் ஷோபி பால்ராஜை எதிர்த்து, நடன இயக்குனர் தினேஷ்குமார் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், நடன கலைஞர்கள் தேர்தலில் கமல்ஹாசன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தபால் துறை தேர்வை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும் என்ற மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், மழைநீரை சேமிப்பது ஒன்றுதான் வழி என்று கூறிய கமல்ஹாசன், அரசு செய்யும் என எதிர்பார்க்காமல், பொதுமக்கள் மழைநீரை சேமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.