கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்..!

429

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களாக நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். vovt மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் குழுவில், மகேந்திரன், அருணாசலம், ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார், கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி.கே.குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஸ்ரீப்ரியா, நாசரின் மனைவி கமிலா ஆகியோர் சினிமா பிரபலங்களாக உள்ள நிலையில், கவிஞர் சினேகன், நடிகர் வையாபுரி ஆகியோரும் கமலின் கட்சியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.