கமல் மக்களை சந்திக்கும் பயணத்திட்டத்திற்கு ‘நாளை நமதே’ என பெயர் சூட்டினார் | முதல் கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கிறார் கமல்.

387

பிப்ரவரி 21-ம் தேதி முதல் கமல் மக்களை சந்திக்கும் பயணத்திட்டத்திற்கு நாளை நமதே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டில் தனது கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செல்கிறார். இந்த பயணத்திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடங்கும் அரசியல் பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என கமல் பெயரிட்டுள்ளார். இன்று யாருடையதாகவோ உள்ள தமிழகத்தை நாளை
தமிழர்களுடையதாகவும் மனிதர்கள் வாழக்கூடிய வகையில் மகிழ்ச்சியடையதாகவும் மாற்றுவதே நாளை நமதே திட்டம் என்று கமல் விளக்கமளித்துள்ளார் அரசியல் பயணத்தின் முதல் கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.