மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை..!

192

டெல்லி சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். இந்தநிலையில், டெல்லி சென்றுள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பான மனுவை தேர்தல் ஆணையத்தில் அளித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் மய்யத்துக்கு தேர்தல் ஆணையம் விரைவில் அங்கீகாரம் வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மக்கள் பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் அவர், ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தி இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.