பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க திட்டம்-நடிகர் கமல்ஹாசன்!

364
haasan

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன், தென்னிந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க திட்டமிடுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறார். மாவட்டம் வாரியாக சென்று மக்களை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். ரஜினியும் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திராவிடம் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள கமல், தென்னிந்திய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களை ஒன்றிணைத்து பொருளாதார ரீதியாக தென்னிந்தியாவை உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று அவர் கருதுகிறார். மத்திய பாஜக அரசை எதிர்க்க, மாநில கட்சிகளின் புதிய கூட்டணி அவசியம் என்பது அவரது வியூகமாக உள்ளது. எனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பு தென்னிந்தியாவில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.