நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து மகா சபாவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்..!

765

நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து மகா சபாவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரப்பேவதாக கூறி வரும் நடிகர் கமல்ஹாசன், பத்திரிக்கை ஒன்றில் இந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்து மகாசபையின் துணைத் தலைவர், இந்து மதம் குறித்து அவதூறு பரப்பும் கமல்ஹாசன் உள்ளிட்டோரை கொலை செய்ய வேண்டும் என்று கடுமையாக பேசியிருந்தார். இந்து மகாசபாவின் இத்தகைய கொலை மிரட்டலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்துள்ள அவர், இது கமல்ஹாசனின் பேச்சுரிமைக்கு எதிரான செயல் என்று அவர் சாடியுள்ளார். இது போன்று கொலை மிரட்டல் விடுக்கும் மதவெறியர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.